யுத்தக் குற்றச்செயல் விசாரணைகள் குறித்து அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் கேட்கவேண்டும்
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் அரசாங்கம் கேட்டறிந்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் விரிவாக பேசி விசாரணைகள் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள் ளார்.
அண்மையில் ஐக்கிய நாடு கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல்ஹூஸைனும் இதேவிதமான கரு த்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் அனைத்துத் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது மிகவும் அவசியமானது என பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் வெளிப்படையானதும் நம்பகமானதுமான பக்கச்சார்பற்ற விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற் சிக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முழு அள வில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும், இலங்கையுடன் தொடர்ந் தும் தொடர்புகளைப் பேணும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.