Breaking News

காணாமல்போன உறவுகளை தேடி அலையும் நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு?

தமி­ழர்கள் சிறை­களில் அடைக்­கப்­பட்டும் இர­க­சிய முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் தமது உற­வுகள் எங்­குள்­ளனர் என்­பது தெரி­யாமல் தமி­ழர்கள் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்­கையில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு விழா நடத்­து­வது எவ்­வாறு நியா­ய­மாகும்? 

இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என வெள்ளியன்று சபையில் தெரி­வித்த தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முன்னாள் எம்.பி. அரி­ய­நேத்­திரன் யார் ஆட்­சிக்கு வந்­தாலும் தமி­ழர்கள் ஏமாற்­றப்­படும் இன­மா­கவே தொடர்ந்தும் இருக்­கின்­றார்கள் என்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கடற்­றொழில் முக­வர்­க­ளுக்கு உரி­ம­ம­ளித்தல் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அரி­ய­நேத்­திரன் எம்.பி இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தமிழ் அர­சியல் கைதிகள் 300க்கும் மேற்­பட்டோர் இன்­னமும் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்த போரா­ளி­களும் அவர்­க­ளது குடும்ப அங்­கத்­தி­னர்­களும் திரு­ம­லையில் இர­க­சிய முகாம்­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். இது தொடர்­பாக பல தட­வைகள் முறைப்­பாடு ஏதும் செய்தும் எங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் தொடர்­பான விப­ரங்கள் கிடைக்­க­வில்லை.

இவ்­வாறு தமிழ் மக்கள் நெருக்­க­டி­களை சந்­தித்து கொண்­டி­ருக்கும் நிலையில் வெறு­மனே பொரு­ளா­தார நலனை கருத்தில் கொண்டு அர­சாங்கம் புலம்­பெயர் தமி­ழர்­களை இங்கு அழைத்து விழா நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­களை செய்­கின்­றது. இதனை எப்­படி ஏற்­றுக்­கொள்ள முடியும் ?

இன்று ஜனா­தி­பதி மாறி­யுள்ளார். அவ்­வ­ளவு தான் ஆட்சி. தொடர்ந்தும் தமி­ழர்­களை ஏமாற்றும் ஆட்­சி­யா­கவே உள்­ளது. ஆட்­சி­யா­ளர்­களின் மன­நிலை மாற­வில்லை. தமி­ழர்கள் தொடர்­பான கொள்­கைகள் மாற­வில்லை. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்­க­வில்லை. அவர்கள் ஏமாற்­றப்­பட்டே வந்­துள்­ளனர். இன்றும் அதுவே தான் இடம்­பெ­று­கின்­றது.

நல்­லாட்­சிக்கு 168 நாட்கள் கடந்து விட்­டது. ஆனால் தமி­ழர்­க­ளுக்கு நன்­மை­யில்லை. புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு விழா நடத்த முயற்­சிக்கும் அர­சாங்கம் மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்­பிய 18 தமி­ழர்­களை தடுத்து வைத்­துள்­ளது.

இவர்­களை விடு­தலை செய்­வ­தற்­காக எடுத்த முயற்­சிகள் எதுவும் நிறை­வே­ற­வில்லை. இதுதான் தமி­ழர்­களின் இன்­றைய நிலை. யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்டு போதைப்­பொ­ருட்­க­ள் மது விற்­ப­னை அதி­க­ரிக்­கப்­பட்டு தமிழ் சமூகம் சீர­ழிக்­கப்­ப­டு­கின்­றது. 20 ஆவது திருத்தம் சிறு­பான்­மையின மக்­களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

மட்டக்களப்பில் நெல் அறுவடைக்காலம் நடைபெறுகின்றது. தற்போது அங்கு காட்டு யானைகளின் தொல்லைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.