யாழ். நீதிமன்றத் தாக்குதல், 14 பேர் விடுதலை - 52 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை நன்னடத்தை பிணை முறையில் யாழ். நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 66 சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது 52 சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்த நீதிமன்றம், 14 சந்தேக நபர்களை 5 லட்சம் ரூபா நன்னடத்தைப் பிணை முறையில் விடுவித்துள்ளது.