Breaking News

இலங்கையில் மேலும் ஒரு சுதந்திர வர்த்தக வலயம்

இலங்கையில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வெலிக்கந்த பிரதேசத்தில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்புக்கு வெளியே கட்டுநாயக்க பிரதேசத்தில் சுதந்திர வர்த்தக வலயமொன்று அமைந்துள்ள நிலையில் உத்தேச சுதந்திர வர்த்தக வலயம் இரண்டாவதாக அமைகிறது.

மட்டக்களப்பு-பொலநறுவை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவுள்ள இந்த சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீடு செய்வதற்கு துபாயிலுள்ள முதலீட்டு நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

அந்த முதலீட்டு நிறுவன தலைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் இது தொடர்பான சந்திப்பொன்று இடம் பெற்று இணக்கம் ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு துறை துனை அமைச்சரான எம். எஸ். அமீர் அலி  தெரிவித்தார்.

மட்டக்களப்பு-பொலநறுவை மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் இதற்காக சுமார் 800 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள உத்தேச சுதந்திர வர்த்தக வலயத்தில் மூவினங்களையும் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பேர் நேரடியாக தொழில் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்

இதுதவிர துபாய் முதலீட்டு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்த்தில் பல்கலைக்கழக கல்வியல் பூங்காவொன்றை அமைப்பதற்கும் முன் வந்துள்ளதாக துனை அமைச்தர் எம. எஸ். அமீர் அலி கூறுகின்றார்.