Breaking News

வடக்கில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை!

வடக்கில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அதன் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர் சங்கத்தால் இலங்கையில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

ஒரு சமூகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், ஆளுமை, கலாச்சாரம், கல்வி நிலை போன்றவற்றை அழிப்பதற்கு போதைவஸ்து ஆயுதமாக பயன்படுத்தபடுகிறது.

ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. போதைப் பொருளின் மறைமுகமான விளைவு தான் தற்கொலை முயற்சி என்று அவர் குறிபிட்டுள்ளார்.