Breaking News

மைத்திரியை மஹிந்த சந்திக்கவில்லையாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய பத்திரிகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று இரவு விசேட சந்திப்பு இடம்பெற்றதாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்படி பிரசுரிக்கப்பட்ட செய்திகள் எந்தவகையிலும் உண்மையில்லை என்று செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.