Breaking News

அரசியல் எதிரிகள் மீதான வேட்டையே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு காரணம் -மஹிந்த

அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­படும் பொய் பிர­சா­ரங்கள், பாரிய அள­வி­லான ஊழல்கள் மற்றும் இது­வரை இல்­லாத வகை­யி­லான அர­சியல் எதி­ரிகள் மீதான வேட்டை ஆகியனவையே பிர­த­ம­ருக்கு எதி ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை யோச­னைக்கு கார­ண­மாகும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்­பான யோசனை குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பாதிப் பேர் இதில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர், இவ்­வாறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்த யோச­னையில் அதி­க­ள­வானோர் கையெ­ழுத்­தி­டு­வது இதுவே முதல் முறை­யாகும். பெருந் தெருக்கள் அமைச்­சினால் கட­னாக பெறப்­பட்ட 28 பில்­லியன் ரூபா நிதி, பெருந் தெருக்­களை நிர்­மா­ணிக்க அன்றி, ஹெலிக்­கொப்டர் பயணம் மற்றும் தானசாலை உள்­ளிட்ட வேறு தேவை­க­ளுக்­காக என்னால் மோசடி செய்­யப்­பட்­ட­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் பெருந் தெருக்கள் அமைச்சின் ஆவ­ணங்­களில் தேசிய சேமிப்பு வங்­கி­யிடம் இருந்து குறு­கிய காலத்தில் பெறப்­பட்ட இந்த கடன் பயன்­ப­டுத்­தப்­பட்ட விதம் தெரி­ய­வரும். குறித்த 28 பில்­லியன் ரூபா பணத்தை பெருந்தெருக்­களை நிர்­மா­ணிக்க பயன்­ப­டுத்­தாது வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு செல­விட்­ட­தாக பிர­தமர் கூறி­யது முற்­றிலும் பொய்­யாகும்.

தற்­போ­தைய அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­படும் பொய் பிரசாரங்கள், பாரிய அளவிலான ஊழல்கள் மற்றும் இதுவரை இல்லாத வகையிலான அரசி யல் எதிரிகள் மீதான வேட்டை போன்ற வையே இந்த நம்பிக்கையில்லா பிரே ரணை யோசனைக்கு காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.