யாழ், நீதிமன்ற தாக்குதல்! மேலும் இருவர் கைது
யாழ், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சிகளை கொண்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அரியாலை மற்றும் மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (05) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ், மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.








