Breaking News

வித்தியா படுகொலையை அடுத்து புங்குடுதீவை விட்டு வெளியேறும் குடும்பங்கள்

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக் கொண்ட நான்கு குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி ஏற்கனவே புங்குடுதீவை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளன. இந்த நான்கு மாணவிகளும் வித்தியாவுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களாவர்.

வித்தியாவுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ள- மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள அந்த மாணவிகளை வேறு பாடசாலைகளில் சேர்க்கவும், வேறு இடத்தில் குடியேறவும் அவர்களின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். இவர்களின் உறவினர்களின் குடும்பங்களும் புங்குடுதீவை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் அங்கிருந்து வெளியே யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியா கொலைக்குப் பின்னரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாதுள்ளதே, இந்தக் குடும்பங்கள் வெளியேறுவதற்கான காரணம்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.