ஒபாமாவின் இலங்கை பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது இலங்கை
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைவர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால், அமெரிக்கத் தலைவரின் இலங்கை பயணம் வரலாற்று ரீதியானது. என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக, கடந்த மாதம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எல்லா நாடுகளுடனும், இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.