Breaking News

இங்கிலாந்திலும் தொடர்கிறது கெய்லின் அதிரடி!

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதி­ரடி வீரர் கெயில் தற்­போது நாட் வெஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்­காக விளை­யாடி வரு­கிறார். இந்த தொடரில் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதி­ராக முதல் ஆட்­டத்தில் கள­மி­றங்­கிய கெயில், 92 ஓட்டங்களை மின்­னல்­வே­கத்தில் குவித்தார்.

இந்­நி­லையில் நேற்று நடந்த ஆட்­டத்தில் சோமர்செட் அணி, கென்ட் அணி­யுடன் மோதி­யது. முதலில் விளை­யா­டிய கென்ட் அணி, 20 ஓவர்­களில் 4 விக்கெட் இழப்­புக்கு 227 ஓட்டங்களைக் குவித்­தது. அந்த அணியின் சாம் நார்­தியஸ்ட் 114 ஓட்டங்களையும், டேனியல் பெல் 51 ஓட்டங்­க­ளையும் அதி­ர­டி­யாக குவித்­தனர்.

தொடர்ந்து சோமர்செட் அணி துடுப்பெடுத்தாடத் தொடங்­கி­யது. அந்த அணியின் தொடக்க வீர­ரான கெய்ல் ஆரம்பம் முதலே அதி­ர­டி­யாக விளை­யா­டினார். இந்த போட்­டியில் 62 பந்­து­களை சந்­தித்த கெய்ல், 10 பவுண்­ட­ரிகள் 15 சிக்­ஸர்­க­ளுடன் 151 ஓட்டங்களை அடித்தார். இது இருபது ஓவர் போட்­டி­களில் கெய்ல் அடித்த 15ஆவது சதம் ஆகும். எனினும் கெய்லின் இந்த அதி­ரடி சோமர்செட் அணிக்கு பல­ன­ளிக்­க­வில்லை.

227 ஓட்டங்களை விரட்டி சென்ற சோமர்செட் அணியால், 20 ஓவர்­களில் 7 விக்கெட் இழப்­புக்கு 224 ஓட்டங்களையே எடுக்க முடிந்­தது. இதனால் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்ட் அணி வெற்றி பெற்றது.