Breaking News

துறைமுக நகர் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா?

முழுமையான சூழல் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வது குறித்து மீள ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்படும் அந்த அறிக்கையின் பின் இது தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமையவே இந்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வது குறித்து உண்டான சிக்கல்களின் பின், இது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கபபட்டமை குறிப்பிடத்தக்கது.