எங்கே போகிறது தமிழரசுக்கட்சி-2
வடமாகாண முதல்வருக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் தொதடர்பில் முன்னைய தொடரில் பார்த்திருந்தோம்.
விக்கிக்கினேஸ்வரனிற்கு எதிரான எதிர்ப்பு என்பது ஐ.நாவின் கலப்பு பொறிமுறையிலிருந்து ஆரம்பிக்கின்றது அதாவது ஐ.நாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் வடமாகாண அவையை உள்வாங்கியே நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியிருந்தது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏற்கனவே இனவழிப்பு தீர்மானத்தை வடமாகாணசபையில் கொண்டுவந்ததோடு இதற்கு சர்வதேச பன்னாட்டு விசாரணையே தேவை எனக்கோரி வந்திருந்த நிவையில் அவரை உள்வாங்கி இந்த பொறிமுறையை கொண்டுசெல்வதற்கு அரசு விரும்பவில்லை என்பதுடன் இந்தியாவும் அதனை விரும்பப்போவதில்லை.

இதன் காரணமாகவே விரைந்து செயற்பட ஆரம்பித்தது கொழும்பு நிர்வாகம் இந்திய அரசினதும் முழுமையான மறைமுக திட்டமிடலில் அவர்கள் முதலில் தெரிவு செய்தது யாழிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றினை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்துடன் மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.
இனவழிப்பு தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டபோதும் அதனை சாதுரியமாக நிறைவேற்றிய போதும் அடுத்தடுத்த தீர்மானங்கள் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரால் தடுக்கப்பட்டிருந்தது. சமஸ்டியை நிராகரித்த சிவிகே தான் தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக இப்போது வெறுப்பை தெரிவித்திருக்கிறார்.
இதில் உதயன் தொடர்பாக முதல்வரின் அப்போதைய கருத்து
குறிப்பாக அந்த பத்திரிகை முதல்வருடைய ஒவ்வொரு செயற்பாட்டையும் இரட்டை அர்த்தத்துடன் பிரசரிப்பதும் அல்லது அவரது அறிக்கைகளை மூடிமறைக்கும் செயற்பாட்டையும் ஒப்பந்தப்படி செய்து கொண்டிருக்கிறது. இந்த செயற்பாடானது கடந்த தேர்தலில் முதல்வர் நடுநிலமை வகிப்பதாக அறிவித்ததிலிருந்து தீவீரப்படுத்தப்பட்ட செயற்பாடு இன்றுவரை முதல்வருக்கெதிராக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அப்போது அவர் பிராந்தியங்களின் ஒன்றியம்' என்பது சந்திரிகாவின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்ட விடயம். இது ஆங்கிலத்தில் Union of Regions என்று சொல்லப்படுகிறது. Unitary State என்று சொல்கின்ற ஒற்றையாட்சி முறையிலிருந்து மாறுபட்டது. இதை ஏற்றுகொள்ளாத முறைமையை கொண்டு வருவதற்காகதான் Union of Regions என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. Regions என்பது எங்களை பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம்தான். அது பிழையான விடயம் அல்ல. இதுவும் ஒரு விதமான சமஷ்டி அமைப்புத்தான். அது தான் எங்களுடைய முடிவான முடிவாக நாங்கள் கருதவில்லை என்றார்.

குறிப்பாக அந்த பத்திரிகை முதல்வருடைய ஒவ்வொரு செயற்பாட்டையும் இரட்டை அர்த்தத்துடன் பிரசரிப்பதும் அல்லது அவரது அறிக்கைகளை மூடிமறைக்கும் செயற்பாட்டையும் ஒப்பந்தப்படி செய்து கொண்டிருக்கிறது. இந்த செயற்பாடானது கடந்த தேர்தலில் முதல்வர் நடுநிலமை வகிப்பதாக அறிவித்ததிலிருந்து தீவீரப்படுத்தப்பட்ட செயற்பாடு இன்றுவரை முதல்வருக்கெதிராக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இது இவ்வாறான நிலையிலிருக்க த.தே.கூட்டமைப்பு என்ன நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை எல்லாம் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் யாரென்றே தெரியாது என்று சொல்லுமளவிற்கு இன்று வந்துள்ளது. அந்த அமைப்பு ஆரம்பமான வேளையில் அதில் இடம் பெற்ற அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்து கொண்ட உடன்படிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது அதில் உள்ள 5 பிரிவுகளும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு கைத்சாதிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னனைய நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் வன்னிக்கு அழைக்கப்பட்டு அங்கும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின் அவர்கள் தங்கள் அரசியல் பணிகளை மிகவும் அடக்க ஒடுக்கத்துடன் செய்திருந்தனர் அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது உள்நாட்டு வெளிநாட்டு தொடர்புகளை சிறப்பாக முன்னெடுத்து வந்திருந்தனர்.
உள்நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் மற்றும் அடக்குமுறைகளுக்கெதிராக தலைவர் சம்பந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புவரை சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமளவிற்கு அவர்களுக்கு அரசியல் நெருக்கடி இருந்தது.(வன்னி உத்தரவா என என்னை கேட்காதீர்கள் அவர்களாகவே செய்தார்கள் என எண்ணுவோம்) ஆனால் அவர்கள் 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ்வாற எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக கூடி தமிழர்களுக்காக குரல்கொடுத்தார்களா என்பதே தமிழ்மக்களிடத்தில் உள்ள கேள்வி.
இதன் பின்னர் கூட்டமைப்புக்குள்ளேயே ஓரிருவரின் முடிவுகளே கூட்டமைப்பின் முடிவானபோது அது ஏனைய கட்சிகளுக்கு எரிச்சலைக் கொடுக்கவே கூட்டமைப்பின் பதிவு மேலும் வலுவடைந்தது அங்கத்துவக் கட்சிகள் அடிக்கடி கூடி கலகம் செய்தார்கள் ஆனால் தமிழரசு அதற்கு பணிந்துபோகவில்லை. பின்னர் கலந்துபேசி சில ஆறப்போடும் திட்டங்களை தமிழரசு சொல்ல அதற்கு தலையாட்டின சிறிய கட்சிகள் முடிவு இன்றுவரை முடிவில்லாமல் தொடர்கிறது.

கட்சி தலைவராக பதவி ஏற்று பேசிய பேச்சில் ஒரு மாதத்துக்குள் தமிழ்த் தேசிய அவையை (தற்போதைய தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு) உருவாக்குவேன் என்று சத்தியம் செய்த மாவை ஏன் இதுவரை அதை செய்யவில்லை. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட விக்கி அதை செய்து இருப்பது பற்றி விமர்சிக்கின்றார் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை.