மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் உட்பட நால்வர் பரிதாபமாக பலி!
ரம்புக்கன - மீதெனிய - பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் விஷவாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.
இன்று (19) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த நால்வரின் சடலம் ரம்புக்கன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளுக்கென சடலங்கள் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக ரம்புக்கன பொலிஸார் தெரிவித்தனர்.








