Breaking News

கனடாவில் 140000 இலங்கையர்கள் குடியுரிமையை இழக்கும் நிலை!

கனடாவிலுள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழந்து நாடு திரும்பும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆங்கில பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதன்படி கனடாவில் வசிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள் தங்களது கனேடிய குடியுரிமையை இழக்கும் நிலையையும், நாடு கடத்தும் துரதிஷ்ட நிலையையும் எதிர்கொண்டுள்ளனர். கனேடிய அரசாங்கத்தினால் கடந்த வாரத்தில் இருந்து புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிதாக கனேடிய பிரஜாவுரிமையை பெற்றவர்கள், கனடாவில் பிறந்தவர்களை காட்டிலும் குறைந்த உரிமைகளை கொண்டிருக்கின்றனர் என்ற வகையில் இரண்டாம் நிலை குடியுரிமையாளர்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கனேடிய அரசாங்கத்தின் புதிய நடைமுறையினால் அங்குள்ள இலங்கையர்கள் பின்வாங்கும் நிலையை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கனேடியர்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து கனடாவை பாதுகாப்பதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று கனடாவின் குடிவரத்துறை அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இஸ்லாமிய ஆயுததாரிகளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவே இந்த புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.