Breaking News

ரணிலை வீழ்த்த விரைவில் நாள் குறிப்­போம் எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் கூறு­கி­றார்

தேர்தல் திருத்தச்சட்­டத்தை அர­சாங்கம் நிறை­வேற்­றினால் உட­ன­டி­யாக பொதுத் தேர்த­லுக்கு முகம் கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தயா­ரா­கவே உள்­ளது என எதிர்க்­கட்சித்தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆட்­சியில் இருந்து வீழ்த்த விரைவில் நாள் குறிப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­லயத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

இந்த அர­சாங்­கத்தின் மோச­டிகள் மற்றும் மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அர­சாங்­கத்தின் மீது எமது அதிர்ப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

அதேபோல் நிதி அமைச்சில் நடை­பெறும் கொள்­ளை­களை வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவையும் எமக்கு உள்­ளது. குறிப்­பாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­வுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் கடந்த சில வாரங்­க­ளா­கவே நாம் தீர்­மானம் எடுத்­தி­ருந்தோம்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பெரும்­பான்மை ஆத­ரவு அமைச்சர் ரவிக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தா­கவே இருந்­தது. ஆனால் ஒவ்­வொரு கட்சித் தலைவர்கள் கூட்­டத்­திலும் இந்த பிரே­ரணை தொடர்பில் காலம் தாழ்த்­தப்­பட்டு வந்­தது. நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­திலும் ரவிக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாத் தீர்­மானம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஆனால் மிகவும் போராட்­டத்தின் மத்­தியில் நாம் அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அனு­ம­தியை பெற்­றுள்ளோம்.

அதற்கு அமைய எதிர்­வரும் மாதம் 6ஆம் திகதி பார­ளு­மன்­றத்தில் ரவி கரு­ணா­நா­ய­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும். இது விசேட தினத்தில் கூட்­டப்­படும் பாரா­ளு­மன்றம் என்­ப­தையும் மக்கள் தெரிந்­து­கொள்ள வேண்டும். எனவே 6ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மாகும் பாரா­ளு­மன்ற விவாதம் பிற்­பகல் 6.30 மணி­வ­ரையில் நடை­பெறும். அதன்­பின்னர் அமைச்சர் ரவிக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பு நடை­பெறும்.

அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை தொடர்­பிலும் நாம் சபா­நா­ய­க­ரிடம் தெரி­வித்தோம். ஆனால் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை தொடர்பில் உட­ன­டி­யாக விவா­திக்க முடி­யாத நிலைமை உள்­ளது.

குறிப்­பாக அவர் மீதான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பல வழி­மு­றைகள் உள்­ளன. நம்­பிக்கை இல்லா பிரே­ணையை மூன்று மொழி­க­ளுக்கும் மாற்றி சமர்ப்­பிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்­படும். ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. அதேபோல் கடந்த கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை தொடர்பில் நாம் அழுத்­த­மான கருத்­துக்­களை முன்­வைத்­த­துக்கு அமைய அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில் இந்த விவா­தத்­துக்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­யு­மென சபா­நா­யகர் தெரி­வித்­துள்ளார்.

ஆகவே அடுத்த கட்சித் தலை­வர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தீர்­மானம் எடுப்போம். வெகு விரைவில் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்­கான நாள் குறிப்போம்.

இந்த அர­சாங்கம் மக்­களின் ஆத­ரவில் அமை­ய­வில்லை. ஜனா­தி­ப­தியை மட்­டுமே மக்கள் ஆத­ரித்­துள்­ளனர். ஆனால் பிர­தமர் மக்­களின் ஆத­ரவு இன்றி ஆட்­சிக்கு வந்­துள்ளார். எனவே இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியை உட­ன­டி­யாக கலைக்க வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரி­னது எதிர்­பார்ப்­பாகும்.

எனினும் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முன்னர் 20அவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்ற வேண்டும் என்­பதில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறு­தி­யாக உள்­ளது. நாட்டில் ஆட்சி நடத்துவது எப்படி என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியவில்லை.

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இவற்றை மீளவும் கட்டியெழுப்ப வேண்டும். மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஆட்சியை பலபடுத்தி இழந்த அனைத்தையும் மீளவும் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.