Breaking News

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணுவ வீரர்­களின் எண்­ணிக்­கையை வெளிப்­ப­டுத்த முடி­யாது!

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணுவ வீரர்­களின் எண்­ணிக்­கையை வெளிப்­ப­டுத்த முடி­யாது. பாது­காப்பு விட­ய­த்தில் சில இர­க­சி­யங்­களை பேண­வேண்­டி­யுள்­ளது. எனவே அந்த விட­யத்தை கூற முடி­யாது என்று இரா­ணுவ பேச்­சாளர் ஜயநாத் ஜய­வீர தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

வடக்கில் ஐந்து பொது மக்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் விகிதம் இருப்­ப­தாக வடக்கு முத­ல­மைச்சர் கூறி­யுள்ளார். இது தொடர்பில் யாழ். கட்­டளைத் தள­ப­தி­யி­டமும் கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.

ஆனால் வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணுவ வீரர்­களின் எண்­ணிக்­கையை வெளிப்­ப­டுத்த முடி­யாது. பாது­காப்பு விட­யத்தில் சில இர­க­சி­யங்­களை பேண­வேண்­டி­யுள்­ளது. எனவே தேசிய பாது­காப்பு விட­யத்தை கருத்­திற்­கொண்டு எண்­ணிக்­கையை கூற முடி­யாது.

கேள்வி – காணி விடு­விப்பு எவ்­வாறு உள்­ளது?

பதில் - அது ஒரு செயற்­பா­டாகும். ஜனா­தி­ப­தியின் வழி காட்­ட­லுக்கு அமைய முதற்­கட்­ட­மாக 1000 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவற்றை மக்­க­ளுக்கு வழங்­கி­வ­ரு­கின்றோம். தேசிய பாது­காப்­புக்கு பங்கம் ஏற்­ப­டா­த­வாறு காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கேள்வி – வடக்கில் பெண்­களின் பாது­காப்பில் சிக்கல் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே? "

பதில் – (அமைச்சர் ராஜித்த) நான் வடக்­குக்கு அடிக்­கடி சென்று வரு­பவன். வடக்கு விடு­விக்­கப்­பட்ட பின்னர் 25 தட­வைகள் சென்­றி­ருப்பேன். யுத்த காலத்­திலும் நான் அங்கு சென்­றுள்ளேன். அவ்­வாறு நான் அங்கு சென்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதும் வடக்கு மக்­க­ளுடன் ஒன்­றாக அமர்ந்து உணவு உட்­கொண்ட சந்­தர்ப்­பங்­க­ளிலும் வடக்கில் பெண்­களின் பாது­காப்பில் சிக்கல் நில­வு­வ­தாக யாரும் கூற­வில்லை. அவ்­வா­றான பிர­தி­ப­லிப்பு அங்கு காணப்­ப­ட­வு­மில்லை. தெற்கில் உள்­ளவன் என்ற வகையில் என்­னை­விட வடக்கை பற்றி தெரிந்த யாரும் தெற்கில் இருக்க முடி­யாது.

கேள்வி – அண்­மையில் கொக்­காவில் இரா­ணுவ முகா­முக்கு அருகே புதிய ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில் – (இரா­ணுவ பேச்­சாளர்) அவற்றை நாங்கள் நிரா­க­ரிக்­கின்றோம். அவ்­வாறு கண்டுபிடிக்கப்பட்டவை பழைய ஆயுதங்களாகும். அதாவது தோட்டா போன்றவையே கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு இடத்தில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இவ்வாறான உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடவேண்டாம் என்று கோருகின்றோம்.