Breaking News

மைத்திரி - பான் கீ மூன் பேச்சு தகவல் கசிவு!

கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய விடயம் தொடர்பாக செய்தி வெளிவந்தது. 

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் தாம் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.  எனினும் பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்விக்கு ஊடகம் ஒன்று பதில் அளித்துள்ளது. 

இதன்படி செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவை அமர்வின் முன்னர் இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா? என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவே பான் கீ மூன், மைத்திரியுடன் பேசியுள்ளார்.  இதன்போது செப்டெம்பரில் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளுடன் தாம் அமர்வில் பங்கேற்கவுள்ளதாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அமரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் இலங்கையில் உடனடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை தொடர்பான ஐ,நா அறிக்கை தாமதமாகியுள்ளமை குறித்து ஐ,நா விளக்கம் அளித்துள்ளது.