இறுதி யுத்தத்தில் எம் தலைவரின் கொள்கை பற்றி – கேணல் சங்கர் அவர்களின் மனைவி
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில் கூறப்படுகிறது.
இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது. மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர் இருக்கும் பங்கருக்கு அருகாமையில் தான் தானும் இருப்பதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளிகள் , புலிகளின் நிர்வாக சேவை பிரிவினர் என்று சில பிரிவில் உள்ளவர்கள் சரணடையலாம். ஆனால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். முற்றுகையை உடைத்து வெளியேற முடியுமா என்று முயல்வோம் என்று பிரபாகரன் கூறியுள்ளதாக குகா மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.
யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர விடுதலைப் புலிகளின் தலைமை , இறுதி நேரத்தில் பல முயற்சிகளை எடுத்தது உண்மையே. ஆனால் மே 16 நடக்கவிருந்த இந்திய பொதுத் தேர்தலை கணக்கில் கொண்ட காங்கிரஸ் அரசு, ஆயுதங்களை கீழே போடுங்கள் அனைவரும் சரணடையுங்கள். யுத்த நிறுத்ததிற்கு நாங்கள் பொறுப்பு என்று கூறினார்கள்.
ஆனால் புலிகளோ , யாராவது ஒரு மேற்குலக நாட்டின் (அதாவது 3 வது ஒரு நாட்டின்) தலையீடு இருக்கவேண்டும் என்றும். அவர்கள் பிரசன்னமாக இருக்கையில் நாம் சரணடையலாம் என்றும் கூறினார்கள். இதேவேளை பிரபாகரன் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த ரட்ணம் மாஸ்டர் உட்பட சுமார் 300 போராளிகள், ராணுவ முற்றுகையை உடைத்தே வெளியேறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை இருந்தார்கள்.
இருப்பினும் புலிகளின் சில உயர்மட்ட உறுப்பினர்கள் வேறு ஒரு நாட்டு அனுசரணை இருந்தால் தாம் சரணடையலாம் என்று எண்ணினார்கள். ஆனால் மே 16ம் திகதி சரணடைந்த ப.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பலரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது.
இது இவ்வாறு தான் நடக்கும் என்று கூட , புலிகளில் உள்ள மூத்த தளபதிகள் சிலர் எதிர்வு கூறி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக “கேணல் ஜெயம்” அவர்கள் , நடேசனை சரணடைய வேண்டாம் என்று கூட அறிவுறுத்தி இருந்தார். ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வகுத்த திட்டங்களே இறுதியில் நிறைவேறியது.
போர் என்றால் வெற்றி தோல்வி இருப்பது சகஜம். 33 வருட போராட்டத்தில் , புலிகள் சாதிக்காத விடையமே கிடையாது எனலாம். 2ம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாட்டின் , ராணுவத்தினர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது ஆனையிறவில் தான் என்பது ஒரு வரலாறு. இதனை எவரும் மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது.
மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே தான் நானும் இருப்பேன். நான் தப்பிச் செல்ல விரும்பவில்லைஎன்று பல தடவை கூறியுள்ளார் பிரபாகரன். என் எதிரியின் முற்றுகையை உடைப்பேன் என்று இறுதிவரை கூறியவர் பிரபாகரன். அவரே எங்கள் தலைவர் என்று கூறுவதில் என்றும் எமக்கு பெருமை தான் ! இதில் ஒரு சிறுமையும் வந்துவிடப்போவது இல்லை !








