பலசேனாக்களை இனிமேலும் தலைதூக்க இடமளியோம் அமைச்சர் ராஜித சேனாரத்ன திட்டவட்டம்
பல சேனாக்களை இனிமேலும் தலைதூக்க விடமாட்டோம். தற்போது அனைத்து மதத்த வர்களும் தமது வணக்கவழிபாடுகளை சுதந்திர மாக முன்னெடுக்க முடியும்.
இதன்படி தேசிய நல்லிணக்கத்திற்கு ஜனவரி 8 ஆம் திகதி ஆணை கிடைத்தது. இதனூடாக இனவாதம் இல்லாத நாட்டை நாம் உருவாக்குவோம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரி வித்தார்.
சிறுபான்மை மக்களின் நலன்களில் அக்கற செலுத்தாதன காரணமாக வேமஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் முகாபேயாக தன்னுடைய பெயரை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தாலும் நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமையினாலேயே மஹிந்த தேர்தலில் தோல்வியடைந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 65 ஆவது நிறைவை முன்னிட்டு நேற்று கொழும்பிலுள்ள பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அனர்த்த முகாமைத்துவ இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் உரையாற்றுகையில்,
எனது அரசியல் வாழ்க்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. பேருவளை என்பது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதிகமாக வாழும் தொகுதியாகும். எனது பிறப்பிடமும் அரசியல் ஸ்தானமும் பேருவளையாகும்.
2010 ஆம் ஆண்டு தேர்தலின் போது முஸ்லிம்களின் அதிகளவு வாழும் தொகுதிகள் தோல்வி கண்டிருந்த தருணத்தில் பேருவளையை என்னால் வெற்றிக் கொள்ள முடிந்தது. இது அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டது.
நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக சுமார 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தம் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு எதிர் மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது.
30 வருடக்கால யுத்ததிலிருந்து நாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‘ மீட்டினாலும் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடமாகியும் நாட்டில் நல்லிணக்கத்தையும் சமானத்தையும் ஏற்படுத்த முனையவில்லை.
தென் ஆபிரிக்காவில் கறுப்பு வௌ்ளை வேறுப்பாடு காணப்பட்ட போது, கறுப்பு இனத்தவர்கள் வௌ்ளை இனத்தவர்களால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். எனினும் நெல்சன் மண்டேலா என்ற புரட்சித்தலைவன் ஆட்சிப்பீடமேறியவுடன் தன்னுடைய சமூகத்தை காலால் மிதித்தவர்களை தண்டிக்காது, நாட்டின் சமாதானத்திற்கு செயற்ப்பட்டமைியினால் வரலாற்றில் தனக்கென பெயரை சர்வதேச அளவில் பதித்துக்கொண்டார்.
எனினும் முகாபே என்ற சர்வதிகாரியுனுடைய செயற்பாடு நெல்சன் மண்டேலாவை விடவும் வேறுப்பட்டது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் யுத்ததை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‘வினால் தமிழ் ,முஸ்லிம், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிவில்லை. அதற்கு மாறாக இனவாதம் போ‘ிக்கப்பட்டது.
இதன்காரணமாக நாட்டில் பாரிய அனர்த்திற்கு உள்ளானது. இதன் விளைவாக மஹிந்த ராஜபக்‘வை முகாபே சர்வதேசம் முதல் நாட்டு மக்கள் அவதானித்தனர். இதுவே தேர்தலில தோல்வியடைவற்கும் பிரதான காரணமாகும்.
இந்நிலையில் தேசிய நல்லிணக்கத்திற்கு ஜனவரி 8 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. தற்போது எவருடைய அச்சுறுத்தல்களும் இல்லாமல் முஸ்லிம் ஐந்து நேரமும் பள்ளிக்கு சென்று தொழமுடியும். ஆகவே பல சேனாக்களை இனிமேலும் தலைதூக்க விடமாட்டோம்.இனவாதம் இல்லாத நாட்டை நாம் உருவாக்குவோம்.