Breaking News

தொழிற் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் முழு நேர மற்றும் பகுதிநேரதொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடாத்திவருகின்றது. 

தற்போது 2015 2ம் காலாண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறிகள் அனைத்தும் தேசியதொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கான பயிற்சியாகும். இக்கற்கைநெறிகள் கற்கவிரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலகநேரத்தில் மாவட்ட அலுவலகம், 1ஆம்மாடி,வீரசிங்கம் மண்டபம், இல.12,கே.கே.எஸ் வீதி,யாழ்ப்பாணம் தொ.பே.இல (0212227949) எதிர்வரும் 20.07.2015 திகதிக்குமுன்னர் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.