18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு - சம்பிக்க
எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆண்டுகள் நாட்டை கட்டியெழுப்பு பொருளாதார திட்டம் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். ஓகஸ்ட் 18ம் திகதி உருவாக்கப்படும் அதிகாரத்துடன் கூடிய புதிய பாராளுமன்றில் விருப்பு வாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் என பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறினார்.
நாட்டில் 17 பொருளாதார வலயங்களை உருவாக்குவதோடு 10 லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பாட்டாளி இவ்வாறு தெரிவித்தார்.








