Breaking News

புலிகள் காலத்தில் பூனையைப் போலி­ருந்த பொது­பல சேனாக்கள் இன்று சிங்­கத்தைப் போலாக முயற்சி


புலிகள் இயக்கம் நாட்டில் இருந்த காலத் தில் பூனையைப் போல இருந்த பொது பல சேனாக்கள் இன்று சிங்­கத்­தைப்­போ­லாக முயற்­சிக்­கின்­றார்கள். 




அவர்­க­ளுக்கு 17ஆம் திகதி மக்கள் தகுந்த பாடம் புகட்­டு­வார்கள் அப்­போது இவர்கள் மண்­ணெண்ணெய் பட்டசாரைப் பாம்பைப் போல் ஓடி மறை­வார்கள் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமரர் ஜயலத் ஜய­வர்­த­னவின் புதல்­வரும் கம்­பஹா மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சி யின் வேட்­பா­ள­ரு­மான கவிந்து ஜய­வர்­தன தெரி­வித்தார். மாகாண சபை­யி­னூ­டாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட

சேவை­யி­னையே மக்­க­ளுக்கு வழங்­க­மு­டி­கி­றது. எனவே மக்­க­ளுக்கு நிறை­வா­னதும் சிறந்­த­து­மான சேவை­யினை வழங்­கு­வ­தற்கு 13ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எனது தந்­தை­யா­ரான டாக்டர் ஜயலத் ஜய­வர்­தன ஒரு மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ள­ராக செயற்­பட்டு அர­சி­யலை முன்­னெ­டுத்தார். இலங்­கையர் என்­ற­வ­கையில் தமிழ், சிங்­களம்,முஸ்லிம் பேகர், மலே என சகல மக்­க­ளையும் ஒரே­மா­தி­ரியே நோக்­கினார். அது­மாத்­தி­ர­மன்றி

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக குரல் கொடுத்தார்.

பல்­வேறு துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்த வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த அப்­பாவி மக்­க­ளுக்­காக தொடர்ச்­சி­யாக குரல் கொடுத்தார். ஆகை­யினால் அவர்­மீது புலி முத்­திரை குத்­தி­னார்கள். அந்த சந்­தர்ப்­பத்தில் பாட­சாலை மாண­வ­னாக இருந்த நான் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது. சமூ­கத்­துக்கு முகம்­கொ­டுக்க முடி­யாது மன­த­ளவில் பெரிதும் பாதிக்­கப்­பட்­டடேன்.

ஜயலத் ஜய­வர்­த­ன­வுக்கும் புலிகள் இயக்­கத்­துக்கும் தொடர்­புகள் இருப்­ப­தா­கவும் அதனால் தான் வடக்­குத்­தமிழ் மக்­க­ளுக்­காக ஜயலத் பேசு­கின்றார் என்றும் சேறு­பூசத் தொடங்­கி­னார்கள். அப்­போது எனக்கு மிகுந்த கவலை ஏற்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தில் முடி­வெ­டுத்தேன் எமது நாட்­டி­லுள்ள அப்­பாவி மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் தலை­மைத்­து­வத்தை ஏற்று என்­றா­வ­தொரு நாள் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டு­மென்று எண்­ணினேன்.

அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு எனது தந்­தை­யான டாக்டர் ஜயலத் ஜய­வர்­தன உயி­ரி­ழந்தார். எனவே அவ­ரு­டைய பணியை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்ல வேண்­டு­மென்ற நோக்­கிலும் இந்த நாட்டை நேசிக்கும் இளைஞன் என்­ற­வ­கை­யிலும் நேர­டி­யாக அர­சி­யலில் இறங்க தீர்­மா­னித்தேன். அத­ன­டிப்­ப­டையில் கடந்த வருடம் மேல்­மா­கா­ண­சபைத் தேர்­தலில் கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு 41000 வாக்­கு­களை பெற்று மாவட்ட ரீதியில் இரண்­டா­வது இடத்­தை­யெ­டுத்து வெற்­றி­யீட்­டினேன்.

இன்று சகல இன,மத மற்றும் மொழி­களை சார்ந்த மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டத்தும் வகை­யி­லேயே தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன். எனது தந்­தையை நேசித்­ததை போன்று எந்த வேறுபாடுமின்றி மக்கள் என்னை நேசித்து அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்கள்.

பாராளுமன்றத்துக்கு செல்லும் நான் எனது தந்தையின் வழியின் இன,மத பேதமின்றி மனித நேயத்துடன் மக்களுக்கான சேவையினை முன்னெடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.