மகிந்த அரசின் முறைகேடு குறித்து விசாரிக்க அவுஸ்ரேலியாவின் உதவியை நாடும் இலங்கை
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அவுஸ்ரேலிய சமஷ்டி காவல்துறையின் உதவியை இலங்கை பொலிஸ் நாடியிருக்கிறது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், குறிப்பிட்ட அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தவே, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த உதவி நாடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அதிகாரி இலங்கையில் முறைகேடுகளைச் செய்து திரட்டிய பணத்தைக் கொண்டு அவுஸ்ரேலியாவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விசாரணை நடத்தவே அவுஸ்ரேலிய காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.








