தமிழர் தாயகப் பகுதியில் அதிகார மையம் உருவாக்கப்படும் – த.தே.ம.முன்னணி (காணொளி இணைப்பு)
தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்தால் தமிழர் தாயகப் பகுதியை ஒருங்கிணைத்து வடக்கு கிழக்கை உள்ளடக்கிய ஒரு அதிகார மையம் உருவாக்கப்பட்டு அதற்குத் ‘தமிழ்த் தேசிய அவை’ எனப் பெயரிடப்படும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த அதிகார மையமானது 2001க்குப் பின்பு இருந்த நிழல் அரசாங்கத்தைப்போல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அதிகார மையமானது 2001க்குப் பின்பு இருந்த நிழல் அரசாங்கத்தைப்போல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசியல்சார்ந்த வேலைகளில் ஈடுபடும் அதேநேரம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை காணொளியூடாகத் தெரிவித்துள்ளார்.








