இனி அமையப்போவது 100 நாள் அரசல்ல நிலையான ஐந்தாண்டு அரசாங்கமே: சம்பிக்க
பொதுத்தேர்தலின் பின்னர் இலஞ்ச ஊழல்களை தடுப்பதற்கான சலுகைக்குழுவை பலப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படுமென தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணலக்க ஹொங்கொங்கின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறிமுறையை இலங்கையில் பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தலைமை செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசியல் முன்னணியை அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் பிரதிநிதியான டி.எஸ்.சேனாநாயக்க சிங்கள மஹா சபாவின் தலைவராக பண்டாரநாயக்க முஸ்லிம்லீக்கின் கலீல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பம் ஒருமித்த சிந்தனையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது.
சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச அழுத்தங்களை தடுப்பதற்கு டி.எஸ்.சேனாநாயக்க பண்டாரநாயக்க என்.எம்.பெரேரா ஆகியோரின் ஒருமித்த கொள்கையை நாம் பின்பற்றவேண்டும். அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியூடாக புதிய அரசியல் கலாசாரத்தை அமைப்போம் அத்துடன் இந்தக் கூட்டணி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கொள்கைகளை நிறைவேற்றும் பாராளுமன்றத்தை அமைப்பதையே நாம் பிரதான நோக்கமாக கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 இலட்சம் வாக்காளர் எமக்கு ஆதரவளிப்பார்கள் எனநாம் நம்புகின்றோம்.
நாம் இந்தத் தேர்தலின் போது 100 நாள் அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை. நிலையான 5 ஆண்டு அரசாங்மொன்றைய நாம் அமைக்கவுள்ளோம். அந்த தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி புதிய பொருளாதாரகொள்கையொன்றை அமைக்கவுள்ளது. நாட்டின் அறிவினை கேந்திரப்படுத்திய சமூக சந்தை பொருளாதாரத்தை தேர்தலின் பின்னர் நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம். நாட்டின் சூழலை கருத்திற்கொண்ட தனியார்களின் போட்டித் தன்மையில் சம உரிமையை உறுதிசெய்யும் பொருளாதார முறையாக இது அமையும்.
அதுமட்டுமல்லாது இந்த பொருளாதார முறையினூடாக உணவு மருந்து எரிபொருள் ஆகிய விடயங்களில் இலங்கை தன்னிறைவடையும். அத்துடன் இந்த பொருளாதார முறையூடாக இலங்கையை பிச்சைக்காரர்கள் குடிசையற்ற நாடாக மாற்றமுடியும்.
தேர்தலின் பின்னர் இலஞ்ச ஊழல்களை தடுப்பதற்கான ஆணைக்குழுவை பலப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரங்களை பலப்படு>த்துவதற்கும் அதற்காக ஹொங்கொங் இல் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பொறிமுறையை பின்பற்றவுள்ளோம். சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்குவதனூடாகவே இலஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.








