Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்.பல்கலையில் துண்டுப்பிரசுரங்கள் (படங்கள் இணைப்பு)

மிக நீண்ட காலமாக விசாரணைகள் முடிக்கப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத் வைக்கப்பட்டுளள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி துண்டுப்பிரசுரங்கள் இன்று காலை விநியோகிக்கப்படடுள்ளது.

அரசியல் கைதிகளின் பெற்றோர்களினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கத்தின் அனுசரணையுன் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலேயே இத் துண்டுப்பிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளது.

உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் விநியோகிக்கப்பட்ட இத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

நீண்ட நெடுந்துயர் சுமந்த தமிழர் எம் வாழ்வில் நமக்காய் பாடுபட்டு இதுவரை மீட்சி கிட்டாது மீளத்துடிக்கும் சிறைவாசம் அனுபவிக்கும் எம் பிள்ளைகளின் விடுதலைக்கான உங்கள் அனைவருடைய த்துழைப்பையும் ஆதரவையுமு; வேண்டி நின்கின்றோம்.

சுமார் 20 வருட காலம் தொடக்கம் இதுவரை தண்டனை அனுபவித்தும் வழக்கு விசாணைகள் முடீவின்றியும், நீதித்துறையின் பாராபட்சத்தினாலும் பிள்ளைகளையும் தாய்தந்தையரையும் சிறையில் தவிக்க விட்டு நாம் வெளியில் வலியினை சுமந்து வாழ்கின்றோம்.

இதுவரை காலமும் ஆட்சி பீடம் ஏறிய அரசுகளிடம் எல்லாம் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கையேந்தி நின்றோம். தங்கள் அரசியல் நலனுக்காக அவ்வப் போது வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு இருக்க புதிய ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பி தமிழர்களாகிய நாம் இப்புதிய அரசினை வெற்றி பெற வைத்தோம். ஆட்சிபீடம் ஏறிய ஆரம்ப காலங்களில் எம் உறவுகளை எம்முடன் மீளிணைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் காலம் செல்ல செல்ல மாற்றம் பெற்று எம் உறவுகளின் விடுதலையே மறுக்கப்படுகின்றது.

இன ஜக்கியம் நல்லிணக்கம் புரிந்துணர்வு என கூறிக்கொள்ளும் அரசாங்கமானது வழங்கிய வாக்குறுதிகளை செயல்களில் நிறைவேற்றாது, வெறுமனே அரசியல் கைதிகளில் விடுதலையினைப் பற்றிப் பேசி எம்மை ஏறமாற்றுகின்றது. இதுவரையில் அனைத்து அரசியல் தலைவர்களையும் நம்பி நாம் ஏமாந்து போயுள்ளோம்.

காணாமல் போனோர், காணி மீள்குடியேற்றம் போன்ற வற்றிற்கு வெகுஜன போராட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்ததைப் போன்று, அண்மையில் அதிகரித்துவரும் பாலியல் துஸ்பிரயோகங்கள், சமூக சீருழிவுகளுக்கும் எதிரான போராட்டங்களுக்கு எமது மக்கள் உணர்வுபூர்வமாக ஆதரவு வழங்கியது போல எம் பிள்ளைகளின் விடுதலைக்காகவும் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு தர வேண்டும் என்றும் அத் துண்டுப்பிரசுரங்தில் மேலும் கோரப்பட்டுள்ளது