வவுனியாவில் விபத்து! ஒருவர் பலி, 7பேர் காயம்
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்ற ஓட்டோ மீது மன்னார் வீதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹைஏஸ் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் ஓட்டோவில் பயணித்த பெண் ஒருவர் பலியானார்; 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வவுனியா, குடியிருப்பைச் சேர்ந்த இ.ஜானகி (வயது 52) என்பவரே உயிரிழந்தார். காயமடைந்த 7 பேரும் வவுனியா வைத்திசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.








