Breaking News

வெல்லப்போவது யார்? பரபரப்பான தேர்தல் ஆரம்பம்

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றுகால 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்தத்தேர்தலில் 196 நாடாளுமன்ற நேரடி ஆசனத்துக்காக 6151பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்ததேர்தல் வாக்களிப்புக்கள் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளன.தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 2498 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.