ஐ.தே.க 106 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம்
ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு சுமார் 94 ஆசனங்கள் கிடைக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில் கொழும்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலனறுவை, திகாமடுல்ல, திருகோணமலை, மாத்தளை, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகல், அனுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.வன்னி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.








