Breaking News

ரணில் இன்று பிரதமராக பதவி ஏற்கின்றார்

தற்போது பிரதமராக கடமையாற்றி வரும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.மிகவும் எளிமையான நிகழ்வில் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை நியமிக்க உள்ளார்.