Breaking News

மாவையின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் கஜேந்திரகுமார் (காணொளி இணைப்பு)

தமிழ் மக்களின் விடிவிற்காக குரல்கொடுத்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் யுத்தத்தின் இறுதி தருணத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

யுத்தத்தின் இறுதித் தருணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈடுபட்டிருந்ததாகவும், முடிந்தால் அப்போது அந்தப் பேச்சுக்களில் என்ன நடந்தது என்று தெரிவிக்கட்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார மேடையில் சவால்விடுத்திருந்தார். 

இந்த நிலையிலேயே யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குறிப்பிட்டுள்ளார்.