Breaking News

சமஷ்டி கோரிக்கையில் புரட்சி எதுவும் இல்லை - சம்­பந்தன்

உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் சமஷ்டி முறையில் எமக்கு ஓர் அர­சியல் தீர்வு வேண்டும் என்று நாம் கேட்­டுள்ளோம். இதில் புரட்சி எதுவும் இல்லை என தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார். வவு­னியா கலை­மகள் விளை­யாட்டு திடலில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற தேர்தல் பிர­சார கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு என்­ன­வென்று இந்த நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திற்கும் தெளிவாக தெரியும். அதற்­காக ஆரம்­பத்தில் ஜன­நா­யக ரீதி­யாக மற்றும் சாத்­வீக ரீதி­யாக ஒப்­பந்­தங்­களை செய்தோம். ஒத்­து­ழைப்­பு­களையும் வழங்­கினோம். ஆனால் அது கைகூ­டவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் பிரச்சினை பெரும்பான்மை தலைவர்களுக்கு தெரியும்.

வடக்கு கிழக்கை பொறுத்­த­வரையில் தமிழ் மக்கள் அந்த பிராந்­தி­யத்­தில் விசேட அக்­கறை கொண்­ட­வர்கள் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி தந்தை செல்வா கொண்ட கொள்­கையின் அடிப்­ப­டையில் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தனி தேசிய இனம். அவர்கள் சரித்­திர ரீதி­யாக இப்­ப­கு­தியில் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

நாங்கள் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தைத்தை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள். இணைந்த வடக்கு கிழக்கு ஓர் அர­சியல் அல­காகும். எனினும் நிர்­வாக ரீதி­யாக அது கைகூ­டி­யிருந்­தாலும் கூட எம் மீது காலத்­துக்கு காலம் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­மை­யி­னாலும் எமது இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி போரா­டி­னார்கள். அது இன்று முடி­வுற்­றி­ருக்­கின்­றது. அதன் பின்னர் 6 வரு­டங்கள் கடந்துவிட்டன.

இந் நிலையில் இவ் ஆண்டு ஆரம்­பத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. எனவே எமது விடயம் முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் சர்­வ­தேச மய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பின்னியிலேயே பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­று­கின்­றது.

தமிழ் தேசி­யப்­பி­ரச்­சனை தீர்க்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு பல நட­வ­டிக்­கைகள் மேற்கொள்­ளப்­பட்­டன. இந்­திய இலங்கை ஒப்­பந்தம் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் பல மாற்­றங்கள் இடம்­பெற்­றன. எனினும் அந்த மாற்­றங்கள் போது­மா­னது அல்ல என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் காலத்திலும், சந்­தி­ரிக்­காவின் காலத்திலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மச்­ஙக்வின் காலத்திலும் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச ஆட்சியிலும் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

பல்­வேறு பாரா­ளு­மன்ற குழுக்கள் நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டன. பல்­வேறு அறிக்­கைகள் பல்­வேறு தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்டு ஓர் அர­சியல் தீர்வை எடுப்­ப­தற்கு பல் முயற்­சிகள் மேற்­கொ­ளள்ப்­பட்­டன. அவை தொடர்­பாக ஓர் சம­ரசம் மற்றும் ஒரு­மைப்­பாடு இருந்­தாலும் கூட அர­சியல் சாத்­தி­யத்தின் ஊடாக அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந் நிலை­யி­லேயே தேர்தல் இடம்­பெ­று­கின்­றது எனவே தான் இத்­தேர்தல் மிக முக்­கி­ய­மா­னது என்று நாம் கூறு­கின்றோம்.

குறிப்­பாக இந்த தேர்தல் முடிந்த பின்னர் அர­சியல் தீர்வு ஏற்­பட வேண்டும் என்­பது பொது­வான நிலைப்­பாடு. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளிவாக கூறி­யுள்ளோம். அதாவது எவ்­வா­றான தீர்வு தேவை என்­பதை தெளிவா­கவே கூறி­யுள்ளோம். ஒரு­மித்த நாட்­டுக்குள் நாடு பிரிக்­கப்­ப­டாமல் நாம் தனித்­து­வ­மான மக்கள் என்ற அடிப்­ப­டையில் எமது இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் சமஷ்டி முறையில் எமக்கு ஓர் அர­சியல் தீர்வு வேண்டும் என்று நாம் கேட்­டுள்ளோம். இதில் புரட்சி எதுவும் இல்லை. எமது நாட்டில் பல் இனத்­த­வர்கள் மதத்­த­வாகள் இருக்­கின்­றர்ர்கள். அவ்­வா­றா­ன­வர்­களும் வாழும் நாட்டில் உள்ள ஆட்சி முறைமை பல நாடு­களில் இருக்­கின்­றன.

அந்த அந்த இனத்தை மற்றும் மதத்தை சேர்ந்­த­வர்கள் அந்தந்த மாநி­லங்­களில் ஆட்சி புரி­கின்­றார்கள். அதன் அடிப்­ப­டை­யி­லேயே நாம் எமது தீர்வை கேட்­கின்றோம்.அன்­றாடம் நாம் எதிர்­கொள்­கின்ற கரு­மங்கள் சம்­பந்­த­மான அதி­கா­ரங்கள் எமது பிராந்­தி­யங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். அந்த அதி­கா­ரங்­களை கையாண்டு நிறை­வேற்­றக்­கூ­டிய வகையில் தேவை­யான பணத்தை வசூல் செய்­வ­தற்கு உத­விகள் பெறு­வ­தற்­கான அதி­கா­ரங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

மஹிந்த ராஜ­பக்ஷ காலத்தில் எமது மக்­க­ளுக்க தேவை­யான கரு­மங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு விருப்பம் இருக்க வில்லை. அவர்­க­ளுக்கு இருந்த ஒரே­யொரு நோக்கம் எமது மக்கள் மீது துன்­பங்­க­ளை­யும் துய­ரங்­க­ளையும் பிரயோகித்து மக்­களை வெறுப்­ப­டைய செய்வதாகவே காணப்பட்டது.புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட பின்னர் எமது பிரச்­ச­னை­களை தீர்ப்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கத்தின் உத­வி­யுடன் அர­சாங்­கத்­துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமிழ் மக்களின் பிரச்சி­னையை நிதா­ன­மாக கையாண்­டதன் பின்னர் தமிழ் தேசியக்க­கூட்­ட­மைப்பு இந்த நாட்­டிலும் சாவ­தேச சமூ­கத்தின் மத்­தி­யிலும் அங்­கீ­காரம் பெற்­றுள்­ளது.தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேசி தீர்வை காணு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு இந்­தியா, அமெரிக்கா, ஐரோப்­பிய நாடுகள், ஜப்பான் என்று பல நாடுகள் கூறு­கின்­றன. இந் நிலையில் வேறு எந்த சக்­தியும் அந்த அங்­கீ­கா­ரத்தை பெற­வில்லை.

பலரும் பலதை கூறலாம். ஆனால் அவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் என்ன தொடர்பு?, சர்வதேச தலைவர்கள் இவர்களை சந்திக்கின்றார்களா? அல்லது வெளிநாடுகளுக்கு இவர்கள் செல்கின்றபோது சர்வதேச தலைவர்களை சந்திக்கின்றார்களா?, அல்லது இந்த நாட்டிலும் கூடி எவருடனுமாவது தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்துகின்றர்ாகளா? ஆனால் தமிழ் தேசிய்ககூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.