Breaking News

என்னுடன் விவாதிக்க சம்பிக்க தயாரா?

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தி­ருந்தால் யுத்­தத்தில் பிர­பா­க­ரனும் அவ­ரது மனைவி பிள்­ளை­களும் இறந்­தி­ருக்க மாட்­டார்கள். அவர்­க­ளுக்கு பணம் கொடுத்து யுத்தம் செய்­ய­வேண்­டிய அவ­சியம் எமக்கு இருக்­க­வில்லை என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பாளர் உதயகம்­மன்­பில தெரி­வித்தார்.

சம்­பிக்க ரண­வக்க மஹிந்­த­வுக்கு விடுத்­துள்ள சவாலை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். தைரியம் இருந்தால் சம்­பிக்க என்­னுடன் விவா­தத்­துக்கு வர வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.

விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத இயக்­கத்­துக்கு மஹிந்த பணம் கொடுத்­த­தா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தை பலப்­ப­டுத்தும் வேலை­யினை அவர் மேற்­கொண்டார் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். ஆனால் சம்­பிக்க ரண­வக்க பல விட­யங்­களை மறந்­து­விட்டார் என்­பது தெளி­வாக விளங்­கு­கின்­றது. 

ஜாதிக ஹெல உறுமய கட்­சியில் நாம் அனை­வரும் ஒன்­றாக செயற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ரணிலின் ஆட்சிக் காலத்­திலும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் காலத்­திலும் விடு­தலை புலிகள் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக யுத்தம் செய்­ய­வேண்டும் எனக் கூறி ஊர்­வலம் சென்றோம். ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்டோம். அந்த சந்­தர்ப்­ப­களில் அர­சாங்­கமே எம்­மீது கண்­ணீர்ப்­புகை தாக்­கு­தலை நடத்தி யுத்­தத்தை நடத்த முடி­யாது எனக் கூறியது.

அதேபோல் மஹிந்­தவின் ஆட்­சிக்­கா­லத்­திலும் நாம் இவ்­வாறு புலி­க­ளுக்கு எதி­ரான ஆயுத யுத்­தத்தை முன்­னெ­டுக்கக் கோரி ஆர்ப்­பாட்டம் செய்தோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எம்­மீது தாக்­கு­தலை நடத்­தது மாறாக விடு­தலைப் புலி­க­ளுடன் யுத்தம் செய்தார். அந்த போராட்­டமே இந்த நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. யுத்­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜாதிக ஹெல உறுமய முக்­கிய பங்­கினை வகித்­தது உண்­மையாகும். ஆனால் யுத்த வெற்­றியை முழு­மை­யாக உரிமை கோர சம்­பி­க்க­வுக்கு தகுதி இல்லை.

அதேபோல் 2002 ஆம் ஆண்டு உரு­வா­கிய ரணிலின் ஆட்­சியின் கீழேயே இந்த நாட்டில் விடு­தலைப் புளி­க­ளு­ட­னான சமா­தான ஒப்­பந்தம் முன்­னெ­டுக்கப் பட்­டது. அதை செய்­தது ரணில் விக்­கி­ரம சிங்­கவும் பிர­பா­க­ர­னுமே தவிர மஹிந்த ராஜபக் ஷ அல்ல.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தி­ருந்தால் அவர்­க­ளுடன் யுத்தம் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. இந்த யுத்­தத்தில் பிர­பா­கரன் மட்­டு­மல்­லாது அவ­ரது மனைவி பிள்­ளைகள் அனை­வரும் உயிர் இழந்­து­விட்­டனர். பிர­பா­க­ரனை பலப்­ப­டுத்த நினைத்தால் அனை­வ­ரையும் தாக்­க­வேண்­டிய அவ­சிய இல்லை. ஆனால் மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் இருக்கும் போது இவற்­றை­யெல்லாம் நினைவில் வைத்­தி­ருந்த சம்­பிக்க இப்­போது ரணிலின் கூட்­டுக்குள் சென்­ற­வுடன் அனைத்­தையும் மறந்­து­விட்டார்.

மேலும் மஹிந்­தவை விவா­தத்­துக்கு அழைப்­ப­தாயின் அல்­லது மஹிந்­த­வுடன் விவா­திக்க வேண்­டு­மாயின் அதை ரணில் தெரி­விக்க வேண்டும். அவ­ரது கையாட்­க­ளுடன் விவா­திக்க வேண்­டிய அவ­சியம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்லை. நான் சம்பிக்கவுக்கு ஒரு சாவால் விடுக்கின்றேன். அவர் கூறிய அதே புலிக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், புலிகளுக்கு யார் பணம் கொடுத்தது என்பது குறித்தும் சம்பிக்கவுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். சம்பிகவுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும் என்றார்.