Breaking News

ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் இதோ! மனோவின் கட்சிக்கு இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள 13 உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலிக் சமரவிக்ரம,
கரு ஜயசூரிய,
டி.எம்.சுவாமிநாதன்,
அத்துரெலியே ரத்தன தேரர்
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன
திலக் மாரபனல
பேராசிரியர் சீ.ஏ.மாரசிங்க
எம்.கே.டி.எஸ்.குணவர்தன,
அனோமா கமகே
சிறினால் டி மெல்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம் எச் எம் நவாவி மற்றும் முஸ்லிம் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எவ்.எம். சல்மான் மற்றும் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் ஆகியோருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக் கட்சி ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த ஆசனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.