ஐ.எஸ்.இன் கொள்கைகள் இலங்கையிலும் வேரூன்ற ஆரம்பித்துவிட்டன - பொதுபல சேனா
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் கொள்கைகள் வேரூன்ற ஆரம்பித்துவிட்டதையே அவ் அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம் நிரூபித்துள்ளது
எனத் தெரிவிக்கும் பொதுபல சேனாவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டிலந்த விதானகே, இது தெரிந்தும் ஆட்சியாளர்கள் தெரியாதவர்கள் போல் மௌனம் காப்பது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் ஏற்கனவே தலைதூக்கியுள்ள நிலை யில் இன்று ஐ.எஸ்.ஐ.ஸ் அமைப்பும் தமது இஸ்லாமிய ராஜ்ஜியங்களுக்கான வரைபடத்தில் இலங்கையையும் இணைத்துள் ளது.
இலங்கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் தீவிரவாதிகளின் கொள்கைகள் வேரூன்றியுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. எனவே இது மிகப் பயங்கரமான நிலைமை யாகும். ஆட்சியாளர்களுக்கு இது தெரியும். ஆனாலும் தெரிந்தும் தெரியாதது போல மௌனம் காக்கின்றனர். இது நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும்.
இத் தீவிரவாத அமைப்பின் கொள்கைகள் நாட்டுக்குள் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாக அரசாங்கம் தேடிப்பார்த்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.








