Breaking News

இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டு இல்லை!- பிரதி வெளிவிவகார அமைச்சர்

எந்தவொரு நாடும் இதுவரை இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என வெளிவிவகாரத்துறை பிரதிய மைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.


யுத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட வேறு நாடுகளின் ராணுவ அதிகாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யும அதிகாரம் பிரித்தானியாவுக்கு இல்லை என பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று நேற்று தீர்ப்பளித்திருந்தது.

இது தொடர்பான செய்திகள் நேற்று முன்தினம் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் அதுபற்றி கருத்து தெரிவித்த போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவ்வாறான தீர்ப்பு பற்றி தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.