Breaking News

தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுகின்றனர்

இலங்­கையில் தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றனர். 

புதிய அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்டு மாற்­றங்கள் செய்­துள்ள போதிலும் படை­யினர் தொடர்ந்தும் தமிழ்க் கைதி­களை சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்று பிரித்­தா­னி­யாவை மைய­மாகக் கொண்டு இயங்கி வரும் சித்­தி­ர­வ­தை­க­ளி­லி­ருந்து விடு­தலை என்ற அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

இலங்­கையில் எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற நான்கு நாட்கள் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலையில் சித்­தி­ர­வ­தை­க­ளி­லி­ருந்து விடு­தலை என்ற அமைப்பின் இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது பிரித்­தா­னி­யாவில் புக­லிடக் கோரிக்கை முன்­வைத்து நிரா­க­ரிக்­கப்­பட்டு நாடு திரும்­பிய பல இலங்கைத் தமி­ழர்கள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யினர் இவ்­வா­றா­ன­வர்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதி­க­ள­வான சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. எவ்­வா­றெ­னினும் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­னரும் இந்த நிலைமை நீடித்து வரு­கின்­றது. இந்­நி­லையில் நீண்ட கால­மாக இலங்­கையில் நிலவி வரும் சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்­களை தடுத்து நிறுத்த புதிய தலை­மைத்­துவம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணிய குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் இவ்­வாறு சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். மின்­சார அதிர்ச்சி, பாலியல் வன்­கொ­டுமை, தாக்­குதல், சூடு வைத்தல், ஏனைய வழி­களில் பாலியல் வன்­கொ­டுமை உள்­ளிட்ட பல்­வேறு சித்­தி­ர­வ­தைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை இந்த சித்­தி­ர­வ­தைகள் தொடர்பிலான அறிக்கை பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திடம் சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிக்கை குறித்து உயர்ஸ்தானிகராலயம் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.