யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா, சிறிகாந்தா அலுவலகங்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிகாந்தா அலுவலகத்தின் மீது நேற்றிரவு சிறிய ரக குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








