Breaking News

ஏ-9 வீதி விபத்தில் இருவர் பலி

ஏ-9 வீதியில் கொடிகாமம், பூநகரியில் வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

வெளிநாட்டிலிருந்து திரும்பிய உறவினர்களை அழைத்துகொண்டு வீட்டுக்கு செல்கையிலேயே இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.