Breaking News

படித்த, பண்புள்ளவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் - சோபித தேரர் வேண்டுகோள்

எதிர்வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்­காக 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தெரிவுசெய்யும் இன்­றைய தீர்க்­க­மான நாளில் படித்­த­வர்­க­ளையும் பண்­புள்­ள­வர்­க­ளையும் பாரா­ளு­மன்றம் அனுப்ப வாக்­க­ளிக்க வேண்­டு­மென சமூக நீதிக்­கான தேசிய இயக்­கத்தின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய பாரா­ளு­மன்­றத்தில் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பை வழங்க வேண்டும். இது சம்­பி­ர­தாய பூர்­வ­மான தேர்­த­லாக இல்­லாமல் சிந்­தனை மாற்­றத்­திற்­கான தேர்­த­லாக அமைய வேண்­டு­மென்றும் மாது­லுவாவே சோபித தேரர் குறிப்பிட்டார்.

மாதுலுவாவே சோபித தேரர் நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை சந்­தித்து கலந்துரையாடிய பின்னர் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தின் வெளியே குழு­மி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்களிடம் கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

தேரர் இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டின் சட்­டங்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு உட்­பட நிதி நிர்­வாகம் என அனைத்து உய­ரிய விட­யங்­க­ளையும் உரு­வாக்கும் இடம் பாரா­ளு­மன்­ற­மாகும். பாரா­ளு­மன்றம் நாட்டின் இறை­யாண்மை கொண்ட உய­ரிய இட­மாகும். நாட்டின் இரண்டு கோடி மக்­களை பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்­காக 225 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் தீர்க்­க­மான நாள் நாளை­யாகும். (இன்­றாகும்).

எனவே இறை­யாண்மை கொண்ட பாரா­ளு­மன்­றத்­திற்கு எதனோல், போதை பொருள், கசினோ சூதாட்­டக்­கா­ரர்கள், ஊழல் மோச­டிக்­கா­ரர்கள், திரு­டர்­களை அனுப்ப வேண்டாம்.படித்­த­வர்கள், பண்­புள்­ள­வர்கள், புத்­தி­ஜீ­விகள், தொழில்சார் நிபு­ணர்­க­ளுக்கு மக்கள் வாக்­க­ளித்து பாரா­ளு­மன்றம் அனுப்ப வேண்டும்.

இத்­தேர்தல் சம்­பி­ர­தாய பூர்­வ­மான ஆட்சி மாற்றத் தேர்­த­லாக மட்டும் அமை­யாது சிந்­தனை மாற்றம் தொடர்பான தேர்­தா­லாக அமைய வேண்டும். இன மத மொழி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அர­சியல் கட்சி பேதங்­களை மறந்து நாட்­டையும் மக்­க­ளையும் கருத்தில் கொண்டு வாக்­க­ளிக்க வேண்டும்.

முன்­னைய தேர்­தல்­களைப் போலல்­லாது இன்­றைய தேர்­தலில் சட்டம் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது.இதற்­காக தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொண்டோம்.சுவ­ரொட்­டிகள் கட்­அ­வுட்கள் ஊர்­வ­லங்கள் உட்­பட தேர்­தல்கள் சட்­டங்கள் மீறல் இம்­முறை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நூற்­றுக்கு நூறு வீதம் முழுமை பெறா­விட்­டாலும் கடந்த கால தேர்­தல்­களை விட ஒழுக்கம் கடை­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.இலங்­கையின் தேர்­தல்கள் வர­லாற்றில் இத்­தேர்தல் திருப்பு முனை­யாக அமைந்­துள்­ளது.இதே­போன்று தேர்தல் தினத்­தன்றும் அதன் பின்­னரும் தேர்தல் சட்­டங்­களை ஆணை­யாளர் கடு­மை­யாக முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று தெரி­வித்தோம்.

சில இடங்­களில் தேர்தல் மீறல் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை சுட்­டிக்­கட்­டி­ய­தோடு அர­சியல் பேதம் பார்க்­காது இவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தினோம்.ஜனா­தி­ப­தியின் கடி­தத்தை மீள பிர­சூ­ரிக்க வேண்டாம். பிர­சா­ரப்­ப­டுத்த வேண்­டா­மென தேர்­தல்கள் ஆணை­யாளர் கோரியுள்ளார். தேர்தல் ஆணையாளர் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தும் நிலைமை நாட்டில் ஏற்­பட்­டுள்­ளதை வர­வேற்­கின்றோம்.

இத் தேர்தல் வெறும் ஆட்­சி­மாற்றம் கட்சி மாற்றத் தேர்தலாக அமையாது சிந்தனை மாற்றுத் தேர்தல் அமைய வேண்டும்.புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.19 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.