Breaking News

அங்கஜனின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினர்

பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு அண்மித்த பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுத்தந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அங்கஜன் ராமநாதனின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளுக்கு மீறி துண்டுப்பிருசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அங்கஜனின் இலக்கம் பொறிக்கப்பட்ட சிறிய துண்டுப்பிரசுரம் வீசப்பட்டுள்ளது. தேர்தல் விதி முறைகளை மீறி இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் துண்டுப்பிரசுரங்களை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.