அருந்தவபாலனுக்கு ஆசனம் வழங்க வேண்டும்- தென்மராட்சி மக்கள் கோரிக்கை
தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.
சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம்.
அருந்தவபாலன் கடந்த 1977ம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆசனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இறுதியில் சிறிதரனுக்கு தான் ஆசனம் என அறிவிக்கபப்ட்டது.
இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்றுள்ள ஐந்து ஆசனங்களில் அருந்தவபாலனுக்கும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளாதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
பின்னர் அது அவருக்கு இல்லை எனவும் அந்த ஆசனம் சரவணபவனுக்கு என அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களால் தென்மராட்சி மக்கள் இடையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளா இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
அருந்தவபாலனுக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தென்மராட்சி மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவும் தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தார்.








