புலிகளுக்கு 200 மில்லியன் ரூபாவை மகிந்த வழங்கியுள்ளார்! பிரதமர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒப்பந்தமொன்றை கையெழுத்திட்டு, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனக்கு அறிவித்ததாகவும், இதனைவிட மேலதிகமான பணத்தைத் தருவதாக இருந்தால் எனக்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென்றும், இதுகுறித்து ஒப்பந்தமொன்றை செய்துகொள்ள வருமாறு பிரபாகரன் தனக்கு தகவல் அனுப்பியதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
எனினும் அதனைத் தான் நிராகரித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். தம்மதெணிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








