நிரூபித்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்! மகிந்த
தன்னிடம் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்ல ஒரு டொலராவது இருப்பதாக நிருபிக்கப்பட்டால், கத்தியொன்றில் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளத் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய மகிந்த ராஜபக்ச,
எமது வாக்குறுதி பத்திரத்தில் உள்ள சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்க எங்களிடம் பணம் இருக்கிறது. பணத்தைத் திரட்டும் முறை எமக்குத் தெரியும். அப்படி முடியாது போனால், எனது கணக்கில் இருப்பதாகக் கூறும் 18 பில்லியன் டொலர்களைத் தேடிக் கொடுத்தால் நல்லது. வெட்கமில்லாத மனிதர்கள், ஒரு டொலர் என்னிடம் இருப்பதாக ஒப்பிவித்தால் கத்தியொன்றை எடுத்து எனது கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்'' என்று மகிந்த ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டார்.








