கூட்டமைப்பின் ஏற்பாட்டினில் போலி அறிக்கை! அம்பலப்படுத்தியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது.
நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அவதானிப்பை பெற்றிருந்தது








