Breaking News

மைத்திரி – ரணில் ஆட்சி மூன்­றி­லி­ரண்டு பலம்பெற தமிழ் கூட்டமைப்பு உதவும் - சம்பந்தன்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 105 க்கும் மேற்­பட்ட ஆச­னங்­களைப் பெற்று மைத்­திரி அணி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்துடன் கூடிய ஆட்­சியை 18ஆம் திகதி அமைக்கும். இது உறு­தி­யாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

மாவட்­டத்­தி­லுள்ள பல்­வேறு அமைப்­புக்­களின் பிர­தி­நி­களை நேற்று தனது இல்­லத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இரா.சம்பந்தன் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் ஐ.தே.க. 105 ஆச­னங்­க­ளுக்கு மேல் பெற்று வெற்­றிப்­பெ­று­மென கருத்­துக்­க­ணிப்­புக்­களும் ஆய்வுகளும் கூறு­கின்­றன. நானும் அதை ஏற்றுக் கொள்­கிறேன். இதே­வேளை ஐ.ம.சு.மு 70க்கும் 85 க்கும் இடைப்­பட்ட ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐ.ம.சு. கூட்­ட­ணி­யி­லுள்ள மைத்­தி­ரி­ய­ணி­யினர் ஐ.தே.க. வுடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்­பா­ர்கள். அந்த ஆட்சி மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு நல்க காத்­தி­ருக்­கி­றது.

மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்­சி­ய­மைக்­கப்­ப­டு­மாயின் புதிய அர­சியல் யாப்­பொன்று உரு­வாக்­கப்­படும். அந்த அரசில் யாப்பின் மூலம் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு முன்­னெ­டுக்­கப்­படும். வரை­யப்­ப­ட­வுள்ள அர­சியல் யாப்பில் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தீர்­வுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். 65 வரு­ட­கால தமிழ் மக்­களின் போராட்­டத்­துக்கு இதன் மூலம் உட­னடி தீர்வு காணப்­ப­டு­மென்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

தமிழ் மக்கள் எச்­சந்­தர்ப்­பத்­திலும் விலை போன­வர்கள் அல்லர். இனியும் நாம் விலைப்­போகப் போவ­தில்லை. எமது நீண்ட கால போராட்­டத்­துக்கு உட­ன­டி­யாக தீர்வு காணக்­கூ­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ளது. இந்த வாய்ப்பை தவ­ற­வி­டக்­கூ­டாது என்­பதே எமது அதீ­த­மான நோக்­க­மாகும்.

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். இதை உள்ளூர் தலை­வர்­க­ளுக்கு கூறி வந்­துள்ளோம். சர்­வ­தேச சமூகம் இதை­ ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இனியும் காலத்தைக் கடத்­தலாம் என்றும் தமிழ் மக்­களை ஏமாற்­ற­லா­மெனவும் யாரும் தவ­றான கணக்கை போட முடி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட அமைப்பு. எம்­முடன் பேசி தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுங்கள் என சர்வதேச சமூகம் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருப்பதை நாம் அறிவோம்.

புதிய அர­சியல் யாப்­பொன்றை உரு­வாக்கி தான் தொடர்ந்து ஆள வேண்­டு­மென்று நினைத்த மஹிந்த ராஜபக் ஷவை நாம் தோற்­க­டித்து நல்­லாட்­சி­யொன்றை நிறு­வி­யி­ருக்­கிறோம். இந்த ஆட்­சிக்கு ஏற்ற புதிய மாற்­ற­மொன்று எதிர்வரும் தேர்­த­ல் ஊடாகவும் இடம்­பெற வேண்டும்.

தென்­ப­குதி மக்­க­ளிடம் மாற்­ற­மொன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள். இந்த மாற்­றத்தை நல்ல முறையில் நாம் பயன்­ப­டுத்த வேண்டும். மாற்­ற­மொன்று மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏற்­ற­வ­கையில் எங்கள் வெற்றி அமைய வேண்டும்.

தமிழ் மக்கள் ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒற்­று­மை­யாக வாழ­வி­ரும்­பு­கின்­றார்கள். நாம் நாட்டை பிரிக்க விரும்­ப­வில்லை. பிள­வு­ப­டுத்­தவும் முயற்சி செய்­ய­வில்லை. எமது மக்கள் சகல உரி­மை­க­ளு­டனும் சமத்­து­வ­மாகவும் ஒற்­று­மை­யாகவும் வாழ விரும்­பு­கின்றனர் என்­பதை தென்­ப­குதி மக்­களும் சிங்­க­ளத்­த­லை­வர்­களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சர்­வ­தேச விசா­ரணை அடுத்த மாதத்தில் விசா­ர­ணை­ அறிக்­கை­யாக வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும். அது வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மீண்டும் இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தையே நாம் உறுதி செய்ய வேண்­டு­மெ­னக்­கேட்டுக் கொள்­கிறோம்.

தேசிய இனம் ஒன்று அழிக்­கப்­ப­டு­வதை எந்த சமூ­கமும் ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. சர்­வ­தேச சமூ­கமும் அதைப் பார்த்துக் கொண்­டி­ருக்கப் போவ­தில்லை. ஐ.நா. சபையும் இதை அங்­கீ­க­ரிக்கப் போவதில்லை.

தமிழ் மக்களுடைய ஆதரவு இன்றி முஸ்லிம் மக்கள் எந்தவுரிமையையும் பெற்று விடமுடியாது. அதேபோன்றே முஸ்லிம் மக்களுடைய உதவியின்றி தமிழ் மக்களும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை தமிழ், முஸ்லிம் சமூகம் தவறிவிடக்கூடாது என்றார்.