Breaking News

மங்­கள தலை­மையில் உயர்­மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் அமைச்­சர்கள் மட்ட உயர்­மட்டக் குழு கலந்­து­கொள்­ள­வுள்­ளது.

குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, வெளி­வி­வ­கார அமைச்சின் உயர்­மட்ட அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலர் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.30 ஆவது கூட்டத் தொடரின் முத­லா­வது அமர்வில் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவை தலைவர் ஆகி­யோரும் இலங்­கையின் மனித உரிமை நிலை குறித்து பிரஸ்­தா­பிக்க உள்­ளனர்.மேலும் இந்த அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­படும் என்றும் அதன் விப­ரங்கள் குறித்தும் அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை 30 ஆவது கூட்டத் தொடரின் 30 ஆம் திகதி நடை­பெறும் அமர்வில் இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையின் அறிக்கை மீதான விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் அமெ­ரிக்கா பிரிட்டன் சீனா உள்­ளிட்ட நாடுகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன. இவற்­றுக்கு பதி­ல­ளித்து இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அல்­லது ஜெனி­வா­வுக்­கான இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க உரை­யாற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க 30 ஆம் திகதி நடை­பெறும் அமர்வில் இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த விசா­ர­ணையின் அறிக்கை மீதான விவாதம் நடத்­தப்­ப­ட­வி­ருந்­தாலும் அதற்கு முன்னர் குறித்த அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் இலங்கை குறி்த்த விசா­ரணை அறிக்கை வெளி­வந்த பின்­னரே இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான பிரே­ர­ணையை அமெ­ரிக்கா மனித உரிமை பேர­வையில் முன்­வைக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை குறித்த அறிக்­கையின் நன்­றாக ஆராய்ந்த பார்த்த பின்னர் அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யிலும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த உள்­ளக விசா­ர­ணைக்கு கால அவ­கா­சத்தை வழங்­க­வேண்டும் என்றும் கோரும் வகை­யி­லு­மேயே அமெ­ரிக்­காவின் பிரே­ரணை அமை­ய­வுள்­ளது.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்வார் என எதிர்­பார்க்­கப்­படும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜ­யத்­தின்­போது இந்த அறிக்­கையை ஜனா­தி­ப­திக்கு கைய­ளிப்பார் என கூறப்­ப­டு­கின்­றது. எனினும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்துக்கான திகதிகளோ அல்லது அது தொடர்பான விபரங்களோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.