Breaking News

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனைத்து தரப்­பி­னரும் வலி­யு­றுத்த வேண்டும் - சிவா­ஜி­லிங்கம் வலி­யு­றுத்தல்

தாய்த் தமி­ழக உற­வு­களும் புலம்­பெ­யர்­தமிழ் உற­வு­களும் ஓங்கி ஒரு­மித்த நிலையில் குரல் கொடுப்­பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணையை சர்­வ­தேச விசா­ர­ணை­யாக மாற்ற முடியும் என வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத் தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

தெற்­கா­சி­யா­வுக்குப் பொறுப்­பான அமெ­ரிக்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் இலங்கை வந்­தி­ருந்­த­போது தெரி­வித்த கருத்­துக்கள் எம்மைக் கவ­லை­ய­டைய செய்­கின்­றன. குறிப்­பாக சர்­வ­தேச விசா­ர­ணையை விடுத்து உள்­ளக விசா­ரணை மேற்­கொள்­வ­துடன் இலங்கை சார்­பாக தீர்­மானம் நிறை­வேற்ற இருப்­ப­தா­கவும் செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன.

இந்­நி­லையில் நாங்கள் ஒரு­போதும் உள்­ளக விசா­ர­ணை­களை ஏற்க முடி­யாது. எனவே இதனை மீண்டும் சர்­வ­தேச விசா­ர­ணை­யாக மாற்­று­வ­தற்கு ஈழத் தமி­ழர்­க­ளா­கிய நாங்­களும் எமது தொப்புள் கொடி உற­வு­க­ளான தாய்த் தமி­ழ­கமும் அங்­குள்ள சகல அமைப்­புக்­களும் புலம்­பெயர் தமி­ழர்­களும் ஈழத் தமி­ழ­ருக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு கிடைக்­கவும் நீதி கிடைக்­கவும் ஆக்­ரோ­ஷ­மாக போரா­ட­வேண்டும். இதன்­மூ­லமே எமது பிரச்­சி­னை­களுக்குத் தீர்­வாக சர்­வ­தேச நீதி விசா­ர­ணையை வலி­யு­றுத்த முடியும்.

மேலும் ரெலோ இயக்கம் சர்­வ­தேச நீதி விசா­ர­ணையைக் கோரு­கின்­றது என்­ப­தனை அறி­விப்போம். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள ஏனைய மூன்று கட்­சி­க­ளு­டனும் இவை தொடர்­பான கருத்­தொ­ரு­மைப்­பாட்­டுக்­கான பேச் ­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கின் றோம்.

மேலும் மக்கள் தளரக் கூடாது. இலங்­கையர் மீதான போர் நிறுத்த விசா­ர­ணையை உள்­ளக விசாரணையாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அது சர்வதேச விசார ணையாகவே அமைய வேண்டும். அதற்கு ஈழத்தமிழரும் தமிழக உறவுகளும் புலம் பெயர் உறவுகளும் தொடர்ந்து ஆக்ரோ ஷமாக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.