தேர்தலில் பின்னர் தமிழீழம் அமைவது உறுதி - உதயன் கம்பன்பில
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 207 ஆவது நாடாக தமிழ் ஈழம் உருவாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதயன் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் யுத்தத்தினுாடாக பெற முடியாது போயிருந்த தமிழ் ஈழத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளால் பெற முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமையவிருக்கின்ற அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கின்ற பட்சத்தில் அதற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையும் என்றும் அப்போது தமிழீழம் தொடர்பில் உறுதியான கோரிக்கையினை முன்வைத்தே இணையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு வழங்கியிருப்பின் ஏன் அவர்களை அழித்தார் எனவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.








